SuperTopAds

திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஒரு இந்து பாராம்பரியத்தின் ஒரு எடுத்துக்காட்டு! - அங்கஜன்

ஆசிரியர் - Admin
திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஒரு இந்து பாராம்பரியத்தின் ஒரு எடுத்துக்காட்டு! - அங்கஜன்

*திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் விவசாய துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

*திருஞானசம்மந்த பெருமான் பதிகம் பாடிய பெருத்தலத்தை பற்றி அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்து மக்களின் வரலாற்று தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக  விளங்கும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் கருத்து வெளியிட்டமையை ஏற்று கொள்ள முடியாதென யாழ் மாவட்ட அபிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்மந்த பெருமான் தேவார பதிகம் பாடிய திருத்தலமாக குறித்த ஆலயம் விளங்குவதோடு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணன் சிவபூஜை செய்த திருத்தலமாகவும் குறித்த ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

சுமார் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ்ர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் புகழிடமாக விளங்குகின்ற வெடுக்குநாறி, செம்மலை நீராவியடி, அரிசி மலை, திரியாய் கண்ணியா, மத்தலவள முதலான 15 பிரதேசங்களை உள்ளடக்கி கதிர்காமம் வரை தமிழர்களின் புராதான அகழ்வாராய்சி பகுதிகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

இந் நிலையில் தமிழர்கள் புராதன பகுதிகளை அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதாக கூறி பௌத்த வரலாற்று சிதைவுகளை உட்சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை வருத்தம் அளிக்ககூடியதாக உள்ளது.

ஆகவே மனிதனின் செம்மையான வாழ்க்கை தத்துவங்களையும் வழிபாட்டு முறைகளையும் கற்று கொடுக்கும் மதங்களின் பெயரால் ஒர் மதத்தவரை இன்னோர் மதத்தவர் வருத்தும் அளவிற்கு குறித்த தேரர் நடந்துகொள்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.