ஈஸ்டர் பயங்கரவாதிகளுடன் ஹிஷ்புல்லாவுக்கு தொடர்பா..? சிக்கலில் மாட்டப்போகும் ஹிஷ்புல்லா..

ஆசிரியர் - Editor I
ஈஸ்டர் பயங்கரவாதிகளுடன் ஹிஷ்புல்லாவுக்கு தொடர்பா..? சிக்கலில் மாட்டப்போகும் ஹிஷ்புல்லா..

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஷ்புல்லாவுக்கு தொடர்பிருக்கலாம். என சந்தேகம் எழுந்துள்ளது. 

சஹ்ரான் தலைமையிலான குழுவினர் தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து வெடிக்கச் செய்த முயற்சி குறித்த முக்கிய தகவலொன்று 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்ட காணி முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினுடையது என்று 

மேற்படி குண்டு வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்ட பகுதியை ஆய்வுசெய்து விசாரணை நடத்திய உப பொலிஸ் பரிசோதகர் எம்.சி.எம். மொஹமட் ஜெசிலி 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று முன்னிலையாகி சாட்சியமளித்தபோது இதனைக் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி காத்தான்குடி பாலமுனை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் குண்டு பொருத்தப்பட்டு 

சஹ்ரான் உள்ளிட்ட கும்பல் ஒத்திகை பார்த்ததாகவும் இந்த சம்பவ தினத்தன்று தாம் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக 

கடமைபுரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு