SuperTopAds

எல்லையிலிருந்து பின்வாங்கும் சீனப்படைகள்: முகாம்களும் அகற்றம்

ஆசிரியர் - Editor III
எல்லையிலிருந்து பின்வாங்கும் சீனப்படைகள்: முகாம்களும் அகற்றம்

கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பின்வாங்கி வருகிறது.

சீன இராணுவப் படைகள் கண்காணிப்பு மையம் 14இல் இருந்து கூடாரங்களையும், கட்டமைப்புகளையும் அகற்றி வருவதாக இந்திய மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 30ஆம் திகதி இரு நாடுகளின் தரப்பில் இராணுவ தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் படி சீன இராணுவ படைகள் எல்லையில் இருந்து பின் வாங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் சீன இராணுவப்படைகள் பின்வாங்கி வருவதாகவும், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து சீன இராணுவ படைகள் பின் வாங்கி வருவது வாகனங்களின் போக்குவரத்து மூலம் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் பிங்கர் மற்றும் வை-ஜங்சின பகுதிகளில் இருந்து சீனப் படைகள் பின்வாங்கவில்லை என்றும் அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.