உலகை ஆட்டுவிக்கும் கொரோனா!! -ஒரு கோடியே 15 இலட்சம் பேருக்கு தொற்று-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 இலட்சத்து 49 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு கோடியே 15 இலட்சத்து 49 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 இலட்சத்து 85 ஆயிரத்து 886 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 65 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - 29,81,815
பிரேசில் - 16,04,585
இந்தியா - 6,73,165
ரஷியா - 6,81,251
பெரு - 3,02,718
ஸ்பெயின் - 2,97,625
சிலி - 2,95,532
இங்கிலாந்து - 2,85,416
மெக்சிகோ - 2,52,165
இத்தாலி - 2,41,611
ஈரான் - 2,40,438
பாகிஸ்தான் - 2,28,474
சவுதி அரேபியா - 2,09,509
துருக்கி - 2,05,758