பூநகரியில் மீண்டும் கோர விபத்து..! டிப்பர் மோதியதில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor
பூநகரியில் மீண்டும் கோர விபத்து..! டிப்பர் மோதியதில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

கிளிநொச்சி பூநகரி- தம்பிராய் பகுதியதில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலெயே உயிரிழந்துள்ளார். 

3 சக்கர மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் துக்கி வீசப்பட்ட 3 சக்கர மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியுள்ளது. 

சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது 3 சக்கர மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

மேலும் பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் பல்கலைகழக மாணவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.