கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நடத்துகிறீர்களா..? இன்று எங்கெல்லாம் போகிறீர்கள்? சிறீதரனை துருவி..துருவி.. விசாரணை..!

ஆசிரியர் - Editor
கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நடத்துகிறீர்களா..? இன்று எங்கெல்லாம் போகிறீர்கள்? சிறீதரனை துருவி..துருவி.. விசாரணை..!

ஜீலை-5 கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நடத்துகிறீர்களா? என கேட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்திற்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

குறிப்பாக சி.சிறீதரனிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதுடன், நினைவேந்தல் நடக்கவுள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்ததாக கூறியிருக்கின்றனர். மேலும் அவர் இன்று கலந்துகொள்ளவுள்ள நிகழ்வுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுள்ளது.