சுவிசில் தமிழ்க் கடைகள் அமைந்துள்ள பகுதியில் கத்திக்குத்து! - இலங்கையர் படுகாயம்.

ஆசிரியர் - Admin
சுவிசில் தமிழ்க் கடைகள் அமைந்துள்ள பகுதியில் கத்திக்குத்து! - இலங்கையர் படுகாயம்.

சுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். லுட்சன் மாநிலத்தில் உள்ள வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத்தொகுதி ஒன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல்தாரியும், தாக்குதலுக்கு இலக்கான நபரும் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட தகராறின் போது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

கழுத்துப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான 45 வயதுடைய இலங்கையர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 65 வயதுடைய நபரை கைது செய்ய லுட்சன் மாநில பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத்தொகுதியில் அதிகளவில் தமிழ்க் கடைகள் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு