லடாக் எல்லை தாக்குதல்: சீனாவிடம் புதிய திட்டம் உள்ளது!! -எச்சரிக்கை செய்த வெள்ளை மாளிகை-

ஆசிரியர் - Editor III
லடாக் எல்லை தாக்குதல்: சீனாவிடம் புதிய திட்டம் உள்ளது!! -எச்சரிக்கை செய்த வெள்ளை மாளிகை-

சீனா - இந்தியாவின் லடாக் எல்லை தாக்குதல் தொடர்பில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.

சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. லடாக் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம், இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறிஉள்ளது.

இந்தநிலையில் இந்தியா- சீனா மோதல் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மோதலை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டை விசாரித்து வருகிறோம். அவர்களின் பேச்சுவார்த்தைகளை பின் தொடர்ந்து வருகிறோம்.

இரண்டு நாடுகளும் பிரசசினையை தீர்க்க முயன்று வருவது தெரியும். எல்லை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரச்சினை மேலும் மோசமாக கூடாது என்று இந்தியாவும் - சீனாவும் விரும்புகிறது. 

இதனால் லடாக் எல்லையில் விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லையில் பழைய நிலைமை திரும்ப வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவின் செயல்களை கண்காணித்து வருகிறார். சீனா உலகம் முழுவதும் அத்துமீறி வருகிறது. 

உலகின் பிற நாடுகளில் சீனா எப்படி அத்துமீறுகிறதோ அதே போல இந்தியாவிலும் அத்துமீறுகிறது என்று டிரம்ப் நம்புகிறார். சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது அதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு