கருணா அம்மானின் அதிரடி-13 தமிழ் பேசும் குடும்பநல மாதுக்கள் மத்தியமாகாணத்தில் இருந்து கிழக்கிற்கு இடமாற்றம்
மத்திய மாகாணத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு அவர்களின் சொந்த இடமான கிழக்கு மாகாணத்திற்கு உடனடி இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் இன்று(1) அதிரடி தலையீட்டினால் குறித்த இடமாற்றம் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 13 தமிழ் முஸ்லீம் குடும்ப நல மருத்துவ மாதுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மத்திய மாகாணத்தில் சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிய இக்குடும்ப நல மருத்துவ மாதுக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய செயற்பட்ட கருணா அம்மான் தேர்தல் பிரசார சிரமத்திற்கு மத்தியில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்துள்ளமை பலரது பாராட்டுதலுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் பெற்று வந்தவர்களில் நால்வர் முஸ்லீம்கள் என்றும் ஒன்பது பேர் தமிழ்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப சுகாதார மாதுக்களின் இடமாற்றமானது அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுவதுடன் எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாமல் இவ்விடமாற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்த கருணா அம்மானிற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் ஊடாக அரசியல் அதிகாரத்தை பெற அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கூறி நன்றிகளையும் தெரிவித்தனர்.
கருணா அம்மானின் அதிரடி-13 தமிழ் பேசும் குடும்பநல மாதுக்கள் மத்தியமாகாணத்தில் இருந்து கிழக்கிற்கு இடமாற்றம்