SuperTopAds

நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

ஆசிரியர் - Editor IV
நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்த நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (30.06.2020) நிந்தவூர் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேசங்களில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

பிரதேச செயலகங்களின் கீழுள்ள மகளிர் அமைப்புக்கள் ஊடாக கிராம மட்டத்தில் வலுவுள்ள மகளிர் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவது இதன் நோக்கமாகும். எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள இன மத மொழி வேறுபாடுகள் இல்லாமல் மூவின மக்கள் மத்தியிலும் சிறந்த தொடர்பாடல் நல்லிணக்க மற்றும்

சகவாழ்வுச் சூழலை உருவாக்குவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும் என வளவாளராக கலந்து கொண்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரி.தயாபரன் தெரிவித்தார்.

இதில் அமைப்பின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜெலீல், ரி.ராஜேந்திரன், உறுப்பினர் கே.ரி. ரோகினி, அம்பாறை மாவட்ட செயலக அரச

சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஜ.எல்.இர்பான்

பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர், எம்.ரி.எம். நயீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.