பிரித்தானியாவில் கோரொனா தீவிரமடைந்ததால் லெய்செஸ்டர் நகரில் ஊரடங்கு அமுல்

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் கோரொனா தீவிரமடைந்ததால் லெய்செஸ்டர் நகரில் ஊரடங்கு அமுல்

பிரித்தானியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கொரோனா நோய்த்தொற்று அதிகரித்ததால், அந்நாட்டு அரசு லெய்செஸ்டர் நகரில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. முதலில், கொரோனா பரவலை தடுக்கும் பெரிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

தேசிய ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில் கொரோனா அதிகரித்ததால், லெய்செஸ்டர் மட்டும் பழைய நிலை நோக்கிச் செல்கிறது.

லெய்செஸ்டரில் ஏழு நாள் நோய்த்தொற்று விகிதம் 100,000 பேருக்கு 135 ஆக உயர்ந்துள்ளது. இது மிக அதிக நோயாளிகள் உள்ள நகரங்களை விட மூன்று மடங்கு அதிகம். என்றும், கடந்த வாரத்தில் நாட்டில் புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 10% லெய்செஸ்டரில் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

லெய்செஸ்டரில் அதிகரித்து வரும் பரவல் காரணமாக, ஜூலை 4 ஆம் தேதி அமுலுக்கு வரவுள்ள ஊரடங்கு தளர்வை லெய்செஸ்டருக்கு பொருந்தாது என்று ஹான்காக் பாராளுமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

நாளை முதல், அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை மூடப்பட வேண்டும், அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை முதல் மூடப்பட வேண்டும், என்று அவர் கூறினார். குழந்தைகள் குறைந்த ஆபத்தில் இருந்தாலும் நோய் பரவ வாய்ப்புள்ளது என்றார்.

அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு லெய்செஸ்டர் மக்களை ஹான்காக் கேட்டுக்கொண்டார்.  ஊரடங்கு லெய்செஸ்டர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு