இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு கோரி போராட்டம்!

ஆசிரியர் - Admin
இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு கோரி போராட்டம்!

இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு கோரி, வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால்,கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால், இன்று முற்பகல் 10.30 மணியளவில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கள் உறவுகளுக்கான நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும்”, “சுமந்திரன், ஸ்ரீதரனை எதிர்க்கின்றோம்”, “வடக்கு – கிழக்கில், தமிழருக்கு எதிராக நடத்தப்படும் இராணுவக் கெடுபிடிகளை உடன் நிறுத்து”, “இலங்கையில், போர்க் குற்றம் செய்தவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்”, “எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்”, “வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே?”, “சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்” ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு