கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இந்தியாவில் கொரோனா உச்சம்!! -24 மணி நேரத்தில் 418 பேர் சாவு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் கொரோனா உச்சம்!! -24 மணி நேரத்தில் 418 பேர் சாவு-

இந்தியாவில் கடந்து சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிதாக 418 பேரின் உயிரையும் இந்த ஆட்கொல்லி வைரஸ் பறித்துள்ளது. 

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893  ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 822-பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 இலட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Radio
×