சீனாவிற்கு எதிரான நடவடிக்கை!! -பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை நிறுத்தியது அமெரிக்கா-

ஆசிரியர் - Editor III
சீனாவிற்கு எதிரான நடவடிக்கை!! -பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை நிறுத்தியது அமெரிக்கா-

சீனாவின்  ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவருகிறது என வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது சீனாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள தொடங்கி உள்ளன. இந்நிலையில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

ஹாங்காங் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக சீனா அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு