SuperTopAds

கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த இரு பிள்ளைகளின் தாய்க்கு பிணை

ஆசிரியர் - Editor IV
கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த இரு பிள்ளைகளின் தாய்க்கு பிணை

கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த குடும்ப பெண்ணை ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு   கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் க.தர்மசீலன் மற்றும்  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன்   வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் சென்ற  குழுவினர்  ஞாயிற்றுக்கிழமை(27) மாலை கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட கோணாவத்தை-8 அட்டாளைச்சேனை பகுதியில் திடிர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன் போது குறித்த தேடுதலில் அப்பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான   23 வயதுடைய குடும்ப பெண்ணை 9 சிறு பக்கெட் 5000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன்   கைது செய்தனர்.

பின்னர் கைதான சந்தேக நபரான குடும்ப பெண்ணை  அக்கரைப்பற்று நீதிவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து  ரூபா 1 இலட்சம் சரீர பிணையில்  செல்லுமாறு அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 30 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.