பாகிஸ்தானில் 2 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

ஆசிரியர் - Editor III
பாகிஸ்தானில் 2 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் தற்போது மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது. பொது இடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நோயாளிகளை சிகிச்சை அளித்து பாதுகாப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 4,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,02,955 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் அங்கு இதுவரை மொத்தம் 4,118 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 92,624 பேர் குணமடைந்துள்ளனர்.  

அங்கு அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 78,267 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 74,202 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒட்டுமொத்தமாக 12,39,153 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு