கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா!! -பிரேசிலில் ஆட்டுவிக்கும் கொரோனா-

ஆசிரியர் - Editor II
24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா!! -பிரேசிலில் ஆட்டுவிக்கும் கொரோனா-

கடந்து சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 80 ஆயிரத்தை தொட்டுள்ளது.

மேலும் அங்கு புதிதாக 990 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.


Radio
×