கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சீனாவிற்கு தக்கபதிலடி!! -பிரதமர் மோடி-

ஆசிரியர் - Editor II
சீனாவிற்கு தக்கபதிலடி!! -பிரதமர் மோடி-

சீன அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி வானொலி மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியாற்றியிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகiயில்:- 

இந்தியா தனது எல்லையையும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்ற நிலையை உலகம் கண்டுள்ளது. லடாக்கில் நமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களுக்கு தக்கபதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு எப்போது நிறைவடையும் என மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது என மக்கள் நினைக்கிறார்கள்.

சவால்கள் அதிகமாக இருக்கலாம் ஆனால் நாம் இந்த சவால்களில் இருந்து மீண்டு வரலாம் என்பதை நமது வரலாறு நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த சவால்களுக்கு பின்னர் நாம் மிகவும் வலிமையாக முன்னேறி வருமோம்.

Radio
×