நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்
நிந்தவூர் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள் , கல்வி நிலையங்கள் என்பனவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ .சுகுணனின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் கள நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து இனம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 1210 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது . நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட 32 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 68 பேருக்கு எதிராக சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டது. டெங்கு நுளம்பு பரவக்கூடிய 326 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ,மேற்பார்வை உத்தியோகத்தர்கள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் ,நுளம்பு கட்டுப்பாட்டு பணியாளர்கள் நிகழ்வுகளின் பின்னர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் டெங்கு நுளம்பு பரவலை தடுக்கும் நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.
பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் , மேற்பார்வை சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்.