SuperTopAds

மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு

ஆசிரியர் - Editor IV
மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு

மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு  தொடர்பான நிகழ்வு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்றது. 

மாணவர்களின் உடல் எடை குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது .

கிழக்கு மாகாணத்திலேதான் போசனை குறைபாட்டில் முதலாவது இடத்தில் காணப்படுகின்றது.

கொரோணா அனர்த்தத்தின் பின்னர் பாடசாலைகளை மீள திறக்கப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு கல்முனை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெளிவுபடுத்தினார்.

நாம் ஒவ்வொருவரும் சுகாதார நடைமுறைகள் , உடல் ஆரோக்கியம் குறித்து சிந்தித்து கடைப்பிடிக்க வேண்டும். வெறுமனே துண்டு பிரசுரங்கள் பதாகைகள் மூலம் சுகாதார நடவடிக்கைகளை பேண முடியாது.

வைத்தியர் எம்.ஏ.சி.எம். பஸில் மாணவர்களின் ஆரோக்கியம் குறித்தும்  அதிபர் ஆசிரியர்களுக்கு செயலமர்வில் எடுத்துரைத்தார்