SuperTopAds

ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில் பற்றுதியுடன் உள்ளார்

ஆசிரியர் - Editor IV
ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில் பற்றுதியுடன் உள்ளார்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சியை சிறுபான்மை மக்கள் அம்பாறையில் ஆதரிப்பது அதிகரித்துள்ளதாக  வியத்கம அமைப்பின் இம்மாவட்டத்துக்கான இணைப்பாளரும்  அம்பாறை பிராந்தியத்துக்கான சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரும்  ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான வைத்தியக் கலாநிதி திலக ராஜபக்ஸ தெரிவித்தார்.  

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது எல்லையில் மக்களை சந்தித்த பின்னர்  சனிக்கிழமை(27) இரவு விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

 அம்பாறை மாவட்ட  மக்கள் சந்திப்பில் பொதுஜன பெரமுன கட்சியை ஆதரித்து அதிகளவான சிறுபான்மை மக்கள் முன்வந்துள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடிப் பிரதிநிதியாகப் போட்டியிடுகின்ற என்னை  நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் பொருத்தமான உரிய தீர்வுகளை சிறுபான்மை மக்களாகிய நிங்கள்  அடைய முடியும்.கடந்த காலம் சிலரால் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் பொய்யாகி ராஜபக்ஸக்கள்தான் தலைமைத்துவத்துக்கு பொருத்தமானவர்கள் என்பது உலக அளவில் நிரூபணமாகி உள்ளதுஇ ராஜபக்ஸக்களின் மரபணுவில் தலைமைத்துவ பண்பு காணப்படுகின்றதுஇ அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தை அனைத்து வகைகளிலும் மேம்படுத்த  நாம் மேம்படுத்த வேண்டும்.

 ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ என்றால் இனம் தெரியாத பயம்  ஒன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நின்று நிலவுகின்றது  ஆனால் பயத்தை நீக்கி  தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில் அவர் பற்றுறுதியுடன் உள்ளார். அதற்காகவே என்னை அவரின் நேரடி பிரதிநிதியாக தேர்தல் களத்தில் நிறுத்தி உள்ளார்இ தமிழ் மக்களின் மனங்களை அன்பால் நிச்சயம் வெல்வோம் என்றார்.

கடந்த காலங்களில் இம்மக்கள் பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாக கூறிய மக்கள் பிரதிநிதிகள் அதனை தீர்க்காமல் இருந்து இப்பிராந்திய மக்களை ஏமாற்றி வருவதனை நன்குணர்ந்ததன் அடிப்படையில் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஒலுவில் துறைமுகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் கடற்கரை அண்டிய பகுதிகளில் நிகழ்ந்து வரும் கடலரிப்பு, இதன் மூலமாக இப்பகுதி மக்கள் இழந்து வரும் பல்வேறான இழப்புகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.