SuperTopAds

குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்- வியாபாரி மனைவியிடம் சரத்குமார் உறுதி

ஆசிரியர் - Admin
குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்- வியாபாரி மனைவியிடம் சரத்குமார் உறுதி

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிர் இழந்ததில் மீளாத் துயருற்று இருக்கும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் மகள் பெர்சியிடம் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் மற்றும் அவரது துணைவியார் ராதிகா சரத்குமாரும் காணொலி காட்சி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தனர்.

அப்போது ஆர்.சரத்குமார் செல்வராணி, பெர்சியிடம் ஆகியோரிடம் கூறும்போது, “குடும்பத்தின் தூண்களான இருவரின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க சட்ட ரீதியான அனைத்து உதவிகள் மற்றும் பொருளாதார தேவைகளுக்கும் குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்ய கடமைபட்டு இருக்கிறேன். எந்த ஒரு உதவி என்றாலும் அழைக்கின்ற தூரத்தில் எங்கள் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்கள்” என்றார். காணொலி மூலமாக ஆறுதல் தெரிவிக்கும் போது, கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்.சுந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் குரூஸ் திவாகர் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.