அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவும் கொரோனா!!
அமெரிக்காவின் அதிக மக்கள் வாழுகின்ற 3 மாநிலங்களில் கட்டுப்பாட்டை மீறி கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் புளோரிடா அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாளில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக எண்ணிக்க்கையில் பதிவாகி உள்ளன.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த 3 மாநிலங்களும் அமெரிக்காவில் வாழும் 32.8 கோடி மக்கள் தொகையில் 27.4 சதவீதம் ஆகும்.
அதிகரித்த சோதனையே கொரோனா பாதிப்பின் அதிக எண்ணிக்கைக்கு காரணம் என்று சில அரசியல்வாதிகள் கூறும்போது, அது அவசியமில்லை என்று மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 34,720 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன - தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான மூன்றாவது பெரிய எண்ணிக்கையாகும்.
அமெரிக்கா முழுவதும் 23.8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 121,969 பேர் இறந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது. உலகின் மொத்த நோய்த்தொற்றுகள் மற்றும் மொத்த உலகளாவிய இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது குறைந்தது 26 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.