எங்கள் மீது சுமத்தி பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது-ரிசாட் பதியுதீன்
தினமும் புதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மயில் சின்னம் இலக்கம் 5 இல் வேட்பாளராக போட்டியிடும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம் அஸ்ரப் தாஹீரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை(23) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்
ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரித்த வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியுற்றதன் பின்னர் இந்த சதி நாடகத்தை அவர்கள் தொடங்கிஇ படிப்படியாக அதிகரித்து தேர்தல் நெருங்க நெருங்க தீவிரப்படுத்தி வருகின்றனர். திரும்பும் பக்கம் எல்லாம் அம்புகள் நிறைந்தும்இ சதிவலைகள் பின்னப்பட்டும் கிடக்கின்றன. எனினும்இ அவற்றுக்குப் பயந்து எமது பயணத்தை நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அவர்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் இப்போது நவீன வடிவிலான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி எம்மை துரத்தி துரத்தி அடிக்கின்றனர் நாம் எழுந்து கொள்ளமாட்டோம் என நினைக்கின்றனர். இந்தத் தேர்தலில் நீங்கள் தருகின்ற மக்கள் ஆணையே எமக்கு முதற்பலமாக அமையும்.மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் கடந்தகாலங்களில் மனச்சாட்சியுடன் பணியாற்றியிருக்கின்றது.
கடந்த தேர்தலில் நாம் மக்கள் காங்கிரஸின் மூலம் அம்பாரையில் களமிறங்கிய போதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கைநழுவிப்போனது. எனினும் இம்முறை இந்த மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கு நாம் செல்கின்ற போதுஇ மயில் சின்னத்துக்கான மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காண்கின்றோம்.இதனால் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திஇ எம்மை துரத்தி துரத்தி அடிக்கின்றனர்.. அவற்றுக்குப் பயந்து எமது பயணத்தை நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என்றார்.