மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு
மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு இன்று(23) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் வளவாளராக கலந்து கொண்டு சமூகங்கள் மத தலைவர்களிடையே நல்லிணக்கம் எவ்வாறு மேற்கொள்வது என்ற தலைப்பின் கீழ் விளக்கவுரை ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் சமூக விழிப்பூட்டல் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, இசம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் ,சம்மாந்துறை நிர்வாக கிராம உத்தியோகத்தகர்கள், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழு செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.