SuperTopAds

கெட்டவார்த்தையில் கேலி செய்தால் நேரடி தாக்குதல்: - நடிகைகள் துணிச்சல் முடிவு

ஆசிரியர் - Admin
கெட்டவார்த்தையில் கேலி செய்தால் நேரடி தாக்குதல்: - நடிகைகள் துணிச்சல் முடிவு

இணைய தளங்களில் நடிகைகளை கெட்ட வார்த்தையில் விமர்சித்தும், மிரட்டியும், அவர்களை மார்ஃபிங் செய்து ஆபாச படம் வெளியிட்டும் இழிவுபடுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை கோருகின்றனர். அதன்பேரில் ஒருசிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு சில நடிகைகள் பதிலடியாக இணைய தளத்திலேயே அந்த நபர் எப்படி திட்டினாரோ அதேபாணியில் திட்டி தீர்க்கின்றனர்.


சில நடிகைகள் அமைதியாக தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு செல்கின்றனர். இணைய தளத்தில் நடிகைகளை கெட்டவார்த்தையில் கிண்டல் செய்பவர்களை பிடித்துவந்து நேருக்கு நேராக அந்த நடிகை முன்னால் நிறுத்தும் மாறுபட்ட நிகழ்ச்சி ஒன்றை வெளிநாட்டு சேனல் ஒன்று நடத்துகிறது. தமிழில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஜரீன் கான். இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார்.


இணைய தளத்தில் இவரை ஒருநபர் கெட்ட வார்த்தையில் கேலி செய்திருந்தார். அந்த நபரை தேடிப்பிடித்துவந்து நடிகை முன் நிறுத்தினர். அவரிடம் நேருக்கு நேர் ஜரீன் கேள்வி கேட்டார். தன்னை விமர்சித்ததற்கு காரணம் கூறாவிட்டால் தாடையை பெயர்த்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

 இதனால் அதிர்ந்துபோன அந்த நபர் பதில் எதுவும் சொல்லாமல் நடுக்கத்தில் அமைதிகாத்தார். ‘இப்படிப்பட்ட உன் செயலால் உனது பெற்றோர்கள் பெருமை அடைவார்கள் என்று நினைக்கிறாயா? நீயெல்லாம் டாக்டராக வந்தால் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்வாய்’ என சரமாரியாக திட்டி தீர்த்தார்.