89 இலட்சம் பேருக்கு கொரோனா!!
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 89 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் சவால் விடுத்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டறியும் பணியில் உலகின் முன்னணி நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 89 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் மேலும் 1,55,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 89,06,655 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் 4,415 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 4,66,253 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47,32,888 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 23,30,311 பேர், உயிரிழப்பு - 1,21,979 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 10,70,139 பேர், உயிரிழப்பு - 50,058 பேர்), மூன்றாவது இடத்தில் ரஸ்யாவும் (பாதிப்பு - 5,76,952 பேர், உயிரிழப்பு - 8,002 பேர்) உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் நீடித்து வருகிறது.