முப்பையில் தாண்டவமாடும் கொரோனா!! -ஒரு நாளில் 100 பேர் பலி-
மும்பை நகரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றும் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மராட்டியம் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 100ஐ கடந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 136 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது, ஒரு நாளில் ஏற்பட்ட மிக அதிக அளவிலான பாதிப்பு ஆகும்.
இதனால் மும்பையில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 114 பேர் பலியாகி இருந்தனர்.
இதனால் கடந்த 2 நாட்களாக மும்பையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 100ஐ கடந்து உள்ளது.