தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்கும் இஷா!
ஃபேஸ்புக், டுவிட்டர். வாட்ஸ் அப் என இணைய தள பக்கங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஹீரோயின்கள் சிலர், சமுதாயம், பெண்கள் அவமதிப்பு குறித்து துணிச்சலாக கருத்து சொல்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் சில விஷமிகள் குறிப்பிட்ட நடிகையை திட்டியும், இழிவாக விமர்சித்தும் கருத்து வெளியிடுகின்றனர்.
யார் இவன், துடக் துடக் துடியா படங்களில் நடித்தவர் இஷா குப்தா. அவரும் விஷமிகளின் விமர்சனத்துக்கு பலமுறை ஆளாகி வருகிறார். இதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்து வந்தார். தற்போது அதற்கான வழியை காண முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் டிஜிட்டல் ஏஜென்சி ஒன்றை அணுகினார். அதில் தனக்கு பிரத்யேமாக இணைய தள பிளாக் (வலைபதிவு) ஏற்படுத்த கேட்டுக்கொண்டார். தன்னைபற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான முறையில் இஷா பதில் அளிக்கிறார். ஆனால் கேவலமாக விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார். இந்த பாதிப்பு தனக்கு மட்டுமல்ல சமுதாயத்தில் பல பெண்களுக்கு ஏற்படுகிறது. அவர்களுக்கு இதுபோன்ற சிக்கலிலிருந்து மீள்வது எப்படி என்பதுபற்றி பிரத்ேயக வலைபதிவில் பதிவிட எண்ணி உள்ளார்.
இதுபற்றி இஷா கூறும்போது,’எனது வலைபதிவில் ஆரம்பகட்டமாக சிலவிஷயங்களை பகிர உள்ளேன். நடிகை களையும், பெண்களையும் குறிவைத்து சிலர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்களை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் முகம் மறைத்து கொள்கிறார்கள். மக்களின் தார்மீக வாழ்க்கை குறிப்பாக பெண்கள்தான் அவர்களது இலக்காக இருக்கிறது. அதை முடிவுக்கு கொண்டு வருவது அல்லது அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து தொடர்ந்து எழுதவிருக்கிறேன். இவ்வாறு இஷா குப்தா கூறினார்.