இந்திய மீது சீனா சதித்தாக்குதல்!! -அம்பலப்படுத்தும் அமெரிக்கா-
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் எழுந்துளள் அசாதாரன நிலையை சாதகமாக்கி சீனா சதித்திட்டம் போட்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாசிங்டனில் நேற்று முன்தினம் கிழக்காசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச்செயலாளர் டேவிட் ஸ்டில்வெல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன் போது லடாக்கில் இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன துருப்புகள் நடத்திய தாக்குதல் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர் பிழைப்பதில் உலகத்தின் கவனம் திசை திரும்பி இருக்கிறது. கொரோனா தொற்று நோயில் இருந்து மீள்வதில் உலகம் கவனம் செலுத்துகிறது.
இந்த கவன சிதறலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனறால், இந்தியா, சீனா எல்லைப்பிரச்சனையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறோம்.
இந்தியாவுடனான சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிது இல்லை. இது ஏற்கனவே கடந்த காலத்தில் (டோக்லாம் சந்திப்பில்) நடத்தியது போன்றதுதான்.
2015-ம் ஆண்டு என்று கருகிறேன். ஜின்பிங் இந்தியாவுக்கு முதன் முதலாக சென்றார். அந்த சர்ச்சைக்குரிய பகுதியை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக துருப்புகளுடன் சென்று சீனா ஆக்கிரமித்தது.
இது பேச்சு வார்த்தை தந்திரமா அல்லது அவர்களின் பலத்தை நிரூபிக்க மூக்கில் குத்துவதா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் பூடான் அருகே டோக்லாம் பிரச்சனையை பார்த்தபோது, இதே போன்ற கவலைகளை கண்டோம். நான் அதை அறிந்திருக்க விரும்புகிறேன். எங்களுக்கு நிறைய காட்சிநிலை இல்லை. சீன சகாக்களுடன் எங்களுக்கு வெளிப்படையான பேச்சு வார்த்தை இல்லை. நேர்மையுடன் சொல்கிறேன். எங்களால் முடிந்தால் அதைப் பார்க்க விரும்புகிறேன்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, சீன வெளியுறவுத்துறை உயர் அதிகாரி யாங் ஜீச்சி இடையேயான பேச்சு வார்த்தையின் போது, இந்திய சீன எல்லை மோதல் விவகாரம் பேசப்பட்டதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பிராந்தியத்தில் சீனாவின் தற்போதைய நடத்தை குறித்து கவலைப்படுகிறோம்.
இந்தியாவை, தென்சீன கடலை, ஹாங்காங் விவகாரங்களையெல்லாம் நாங்கள் பார்க்கிறபோது, சீனாவின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானவை அல்ல. சீனாவுடன் நியாயமான, பரஸ்பரமான ஆக்கப்பூர்வமான முடிவு சார்ந்த உறவைத்தான் அமெரிக்கா நாடுகிறது. இது வெறும் பேச்சளவில் இருக்கக்கூடாது. செயல்களிலும் இருக்க வேண்டும் என்றார்.