இந்தியாவில் கொரோனா 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்!!
இந்தியாவில் 10,974 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மூன்றரை இலட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும் மகாராஸ்டிராவில் ஏற்கனவே விடுபட்டுப்போன 1328 உயிரிழப்பு எண்ணிக்கையையும் இணைத்து இந்தியாவில் மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11,921 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்து உயிரிழந்தும் அந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்த 1,328 பேரையும் இணைத்து நாடு முழுவதும் மேலும் 2,006 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நாடளாவிய ரீதயியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,921 ஆக அதகரித்துள்ளது.
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இந்த தொற்று காரணமாக 1,13,445ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,537ஆகவும் அதிகரித்துள்ளது.
அதற்கடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்ட 2ஆவது மாநிலமான தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48,019ஆகவுள்ளது.
அதனைத்தொடர்ந்து டெல்லியில் 44,688பேரும் குஜராத்தில் 24,577பேரும் உத்தர பிரதேசத்தில் 14,091பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.