சீனவில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா!!
சீனாவின் பீஜிங்கில் நகரில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
அங்கு 56 நாட்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் திகதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மீண்டும் கொரோனா ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.
தினமும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது கொரோனாவின் 2-வது அலை தாக்குதல் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையுடன் முடிந்த 22 மணி நேரத்தில் பீஜிங்கில் மட்டும் 27 பேருக்கு கொரோனா கொத்து கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.