SuperTopAds

சவளக்கடையில் விவசாய இரசாயனங்கள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

ஆசிரியர் - Editor IV
சவளக்கடையில் விவசாய இரசாயனங்கள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

அம்பாறை மாவட்டத்தில்   நெல் விவசாயத்தை தாக்கும் கபிலநிற தத்தி தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு சவளக்கடை கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

பிரதி விவசாய பணிப்பாளர் மாகாண இடை  எம்.எப்.ஏ.சனீர் விவசாய இரசாயன விற்பனை முகவர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கினார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விற்பனையாளர்கள் உரிய  இரசாயனங்களை  விற்பனை செய்ய வேண்டும். தெளிவில்லாமல் அனைத்து இரசாயனங்களையும் நெல் வயல்களுக்கு தெளிப்பதால் கபில நிற தத்தியை உணவாக உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படும் ஆகவே விவசாயத்திற்கு நிலத்தை தயார்படுத்தலிருந்து அறுவடை முதல் அதிக கவனம் தேவை என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் கபில நிற தத்தி தாக்கம் அதிகரித்து நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகள்  நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரனின் தலைமையின் கீழ் இடம்பெற்றது . ஜெய்லாப்தீன் , பயிர் பாதுகாப்பு பாடவிதான வளவாளர்,எம்.எஸ்.எம்.ஜனித் கான் விவசாய போதனாசிரியர்,ஆர்.ரேனுகா , பீ.சியாமளா  தொழில்நுட்ப உத்தியோகத்தர்,என். ஜெகதீஸ்வரன் விவசாய போதனாசிரியர் இரசாயன விற்பனையாளர் என பலர் கலந்து கொண்டனர்.