SuperTopAds

அம்பாறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை

ஆசிரியர் - Editor IV
அம்பாறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதியோரங்களில்  வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.

மக்களின் பாதுகாப்புக்கருதி  குறித்த வேலைத்திட்டத்தினை  வீதி அபிவிருத்தி அதிகார சபை  நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை நாவிதன்வெளி சம்மாந்துறை நிந்தவூர் பகுதிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  வீதிகளை சுத்தப்படுத்துவதுடன் வீதி போக்குவரத்திற்கு தடையாக உள்ள பாரிய மர கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக இடம்பெற்று வரும் இந்நடவடிக்கை சனிக்கிழமை(13) காலை முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்து.

இதன் போது அம்பாறை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள   நீதவான் நீதிமன்ற வளாகம் வீதி  நீதிமன்ற அலுவலகம் பிரதான  வீதிகள்  அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம்   கமநல சேவைத்திணைக்களம்  பேரூந்து தரிப்பு நிலையம் பேரூந்துகள்  வங்கிகள் உட்பட மக்களின் நடமாட்டம் காணப்படும் இடங்களில்   குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விபத்துகளை தவிர்க்கும் வகையில்  அறிவுறுத்தல்கள் பலகைகளை  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடப்பட்டுள்ளது.