SuperTopAds

கொரோனாவின் கிடுக்குப்பிடியில் இந்தியா!! -24 மணி நேரத்தில் 311 சாவு: 12 ஆயிரம் தொற்றாளர்கள்-

ஆசிரியர் - Editor III
கொரோனாவின் கிடுக்குப்பிடியில் இந்தியா!! -24 மணி நேரத்தில் 311 சாவு: 12 ஆயிரம் தொற்றாளர்கள்-

கொரோவின் கிடுக்குப்பிடியில் உள்ள இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களும், அந்நோயால் உயிரிழப்பவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. 

இன்று 14 ஆம் திகதி காலை 8 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 929 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், 311 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்த இந்தியளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 922 ஆகவும், உயிரிழப்பு 9 ஆயிரத்து 195 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 3 ஆயிரத்து 830 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 42 ஆயிரத்து 687 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 397 ஆக உள்ளது. டெல்லியில் ஆயிரத்து 271 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று குஜராத்திலும் ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 ஆயிரத்து 38 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 378 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 348 பே சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.