முகமாலை, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
முகமாலை, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் கிடைக்கவில்லை எனவும் கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் பாடசாலை வளங்கள் களவாடப்பட்டமை தொடர்பாக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.