SuperTopAds

138 ஊழியர்களுக்கு கொரோனா!! -சென்னை தலைமை அலுகலகம் மூடப்பட்டது-

ஆசிரியர் - Editor III
138 ஊழியர்களுக்கு கொரோனா!! -சென்னை தலைமை அலுகலகம் மூடப்பட்டது-

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 138 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்றும் நாளையும் தலைமைச் செயலகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் 44 ஊழியர்கள் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற உள்ளது.