நடுக்கடலில் மூழ்கிய படகு!! -54 பேர் சாவு-
ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலி சென்ற படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியத்தில் அதில் சென்ற ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் 54 பேர் பலியானார்கள்.
ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் மீன் பிடி படகு ஒன்றில் மத்தியதரைக் கடலில் இத்தாலி சென்று கொண்டு இருந்தது. இதில் 54 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.துனிசியாவை நெருங்கும் சமயம் படகு நீரில் மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்
முதற்கட்டமாக ஒரு பெண் உட்பட 14 பேரின் உடல்களை துனிசியா அதிகாரிகள் மீட்டுள்ளனர்.இவர்களை துறைமுக நகரமான சபக்சில் அடக்கம் செய்துள்ளனர். இதனிடையே கெர்கென்னா தீவு பகுதியில் இரண்டு சிறுவர்கள் உள்பட 22 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.
மேலும் கடற்படை அதிகாரிகள் குழு கடலில் மிதந்த 19 உடல்களையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு இதேபோன்று லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 86 ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் துனிசியாவில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.