யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்றா..? இல்லையா..? மழுப்பும் இந்திய தரப்பு, உறுதியாக நிற்கும் வடக்கு சுகாதாரதுறை..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்றா..? இல்லையா..? மழுப்பும் இந்திய தரப்பு, உறுதியாக நிற்கும் வடக்கு சுகாதாரதுறை..

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்து தமிழகம் திரும்பிய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவருக்கு தொற்று இல்லை. என பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

கணேஸ்பாபு என்ற அந்த வியாபாரி தற்போது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய கணேஸ்பாபு என்ற வியாபாரிக்கு கடந்த 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 

கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவு அவருக்கு தொற்று இல்லை என்பதை உறுதிசெய்துள்ளது. எனினும் அவருக்கு 3 ஆம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளியான முடிவுகளே சர்ச்கைகளுக்குக் காரணமாக அமைந்தன. ஆனால் 3 ஆம் திகதி 

கொரோனா தொற்றுக்குள்ளானதாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தி தமிழக சுகாதாரத்துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. எனினும் 6 நாட்களுக்கு தொற்று எனவும் 

தொற்று இல்லை எனவும் மாறியமை எவ்வாறு என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளது இது தொடர்பாக வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோது இந்திய துணைத்தூதரகத்தின் தகவல்களை 

அடிப்படையாகக் கொண்டே தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளதாக கூறினார். இணுவிலில் தங்கியுள்ள வியாபாரிக்கு கொரோனா இல்லை எனத் தகவல் வெளியான நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்து கேட்ட போது இந்திய வியாபாரிக்கு கொரேனா இல்லை.

என்ற தகவலை உத்தியோகபூர்வமாக தகவல் வரும்வரை அவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடரும் எனக்குறிப்பிட்டார். இதைனயடுத்து யாழ்.இந்தியத் துணைத்தூதுவருடன் நேற்று தொடர்பு கொண்டு வினவியபோது யாழில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இல்லை. 

என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கை தமக்கு சம்பந்தப்பட்டவரின் நண்பர்களால் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறினார். எனினும் இந்திய மத்திய சுகாதாரத்துறையுடன் தொடர்புகொண்டு உடனடியக தகவல்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக 

துணைத்தூதுவர் தெரிவித்தார்.  இதேவேளை உத்தியோகபூர்வ பரிசோதனை முடிவுகளை இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு வழங்க இந்திய சுகாதாரதுறை தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றது. நேற்றய தினம் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க

மேற்படி விடயம் தொடர்பில் எந்தவொரு தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், இதனால் பின்னணியை அறிய முடியவில்லை என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு