SuperTopAds

24 மணி நேரத்தில் 331 பேர் சாவு!! -இந்தியாவில் கொரோனா சாவு 7466 ஆக உயர்வு-

ஆசிரியர் - Editor III
24 மணி நேரத்தில் 331 பேர் சாவு!! -இந்தியாவில் கொரோனா சாவு 7466 ஆக உயர்வு-

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7466 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 266598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 331 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

இதுவரை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 129215 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 129917 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.