பூநகரி விபத்து இடம்பெற்ற பகுதியில் மக்கள் கூடியதால் பதற்றம்..! படையினர், பொலிஸார் பாதுகாப்பு..
பூநகரி- மன்னார் வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் விபத்து இடம்பெற்ற பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கூடிய நிலையில் அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் விபத்து இடம்பெற்றிருந்தது. விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபரின் சடலம் நீதிபதி வருகைக்காக அங்கேயே உள்ள நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் அதிகளவான இளைஞர்கள்
அப்பகுதியில் கூடிய நிலையில் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து அங்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.