SuperTopAds

இரு வீட்டு சண்டையில் மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தப்பட்ட இளம் பெண் ஆபத்தான நிலையில்..!

ஆசிரியர் - Admin
இரு வீட்டு சண்டையில் மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தப்பட்ட இளம் பெண் ஆபத்தான நிலையில்..!

இரு வீட்டாருக்கிடையில் நடந்த சண்டையில் இளம் பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியா,மகாறம்பைக்குளம்,ரம்பைவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில்

வாய்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு 

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய இளம் குடும்பபெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பில் 

மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.