கொரோனாவால் உருவான பொருளாதார பாதிப்பு ஒரு தசாப்தகாலத்திற்கு நீடிக்கும்!! -உலக வங்கி-
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கானவர்கள் கொரோனா வைரசினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தகாலத்திற்கு இதன் காரணமாக உருவாகியுள்ள தாக்கம் நீடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
60 மில்லியன் மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்திற்கு பாரிய அடியை கொடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நோய் காரணமாகவும் முடக்கல் காரணமாகவும் பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கியின் தலைவர் இது மிகவும் கரிசனைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
நேரடி தாக்கம் காரணமாக வருமானம் இழக்கப்பட்டுள்ளது,அதேவேளை சுகாதார சமூக தாக்கங்களும் மிகவும் கடுமையானவை என அவர் தெரிவித்துள்ளார்.
வறுமையில் சிக்கியிருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலகவங்கியின் தலைவர் வறிய நாடுகளின் மக்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் அது மாத்திரமின்றி முறைசாரா துறையிலும் வேலைவாய்ப்பை பெற முடியாத நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.