SuperTopAds

அம்பாறையில் தென்பட்ட இரவு சந்திர கிரகணம்

ஆசிரியர் - Editor IV
அம்பாறையில் தென்பட்ட இரவு சந்திர கிரகணம்

இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) சந்திர கிரகணம் அம்பாறை மாவட்டத்தில் நள்ளிரவு  05 ஆம் திகதி பிரகாசமாக  தென்பட்டது.

குறித்த கிரகணமானது  இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய அதிகாலை 02.34 மணிக்கு கிரகணம் நீடித்திருந்ததுடன்  சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடமபெற்றிருந்தது.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல்இ பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆசியாஇ ஐரோப்பியாஇ அவுஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல்இ நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.

அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.

இருப்பினும் இந்திய புராணத்தின் படி சந்திர கிரகணத்தின் போது பல்வேறு அறிவுரைகள் மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி சந்திர கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால்  கிரகணத்தின் போது ஏற்படும் தீமையின் தாக்கத்திலிருந்து விலக முடியும். உணவுப்பொருட்களில் துளசி இலையை சேர்ப்பது மற்றவர்களுக்கு யாசகம் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு உட்கொள்ள கூடாது. கிரகணம் ஆரம்பிக்கும் 3 மணி நேரத்திற்கு முன் உணவு எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவின் பழமையான மரபுப்படி கிரகண நேரத்தின் போது வெளியே செல்லக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.