SuperTopAds

கொரோனா இடர்காலத்தில் இடம்பெற்ற அனேக குற்றச் செயல்களுடன் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்பு..! பொலிஸ் பொறுப்பதிகாரி உருக்கம்..

ஆசிரியர் - Editor IV
கொரோனா இடர்காலத்தில் இடம்பெற்ற அனேக குற்றச் செயல்களுடன் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்பு..! பொலிஸ் பொறுப்பதிகாரி உருக்கம்..

கொரோனா இடர்காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள் அதிகளவான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமில், 

இவ்வாறானவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை காட்டிலும் அவர்களை திருத்தி சமுகத்தில் பெறுமதியானவர்களாக மாற்றும் பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. அதனை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார். 

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆலய உண்டியல் திருட்டு ஒலி பெருக்கி துவிச்சக்கரவண்டி போன்றவற்றை திருடி வந்த இளைஞர்களை எச்சரித்து ஆலோசனையுடன் கருத்து தெரிவிக்கையில் 

மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில்நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் நீங்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அல்லது தொழில் வாய்ப்பு இன்றி இருந்தால் என்னை அணுகினால் உங்களுக்கு 

 தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றேன்.கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இந்து ஆலயங்களில் 

உண்டியல் திருட்டு, ஒலி பெருக்கி, சைக்கிள் ,திருடப்பட்டு வருகின்றன.இதில் எனக்கு சவாலாக அமைந்துள்ளது யாதெனில் மேற்குறித்த சம்பவங்களில் அநேகமாக கைது செய்யப்படுவது இளைஞர்கள் தான்.

எனவெ இவ்வாறு கைதாகும் இளைஞர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அவர்களுக்கு எதுவித தொழில் வாய்ப்பு இன்றி என்னை அணுகினால் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன்.

அதிலிருந்து அவர்கள் வளர்ந்து தத்தமது எதிர்காலத்தை வளப்படுத்தி கொள்ள வேண்டும்.குறிப்பாக இளவயதில் ஒரு வேலையாட்களாக கூலியாளாக செல்லும் ஒரு இளைஞன் தற்போது பெயர் சொல்லுமளவு 

சமூகத்தில் முக்கிய நபராக உள்ளார்கள்.அது மாத்திரமன்றி தற்போது நாட்டில் உலகில் உள்ள சில தலைவர்கள் பிரமுகர்களும் கூட கடந்த அவர்களது சிறுவயதில் தவறுகளை செய்து தண்டனை அனுபவித்தவர்கள்.

இன்று அவர்கள் திருந்தி உலகம் போற்றக்கூடிய நிலையில் பிரபல்யம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இளைஞர்கள் குற்றச் செயல்களில் சரியான வழிநடத்தல் இன்றி ஈடுபடுவது இயல்பு. 

ஆனால் அவ்வாறானவர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் தொழில் நலிவுற்ற இருந்தால் நான் அவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றேன். 

இவர்களுக்கும் ஒரு அழகான குடும்பம் எதிர்கால வாழ்க்கை உள்ளது என்பதை அவர்களுக்கு உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் சிகிச்சைகள் வழங்கி 

சமூகத்தில் நற்பெயரை பெற்றுக்கொடுக்க இயன்றவரை ஒத்துழைப்புகளை செய்ய தயாராக இருக்கின்றேன் என்றார்.