கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

மகாறம்பைக்குளம்- காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டிருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞனும் அவருடைய தாயர், மனைவி ஆகியோர் குறித்த பகுதியில் வீடொன்றில்
வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இளைஞனின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றிருக்கின்றார்.
இளைஞனின் மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த இளைஞனை
காணாத நிலையில், வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் துாக்கில் தொங்கிய 30 வயதான இளைஞனின் சடலத்தை கண்டுள்ளனர்.
சடலம் பழுதடைந்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டிருக்கின்றனர்.