அரச காணியில் குந்தியிருந்து அடாவடி..! ஆப்படித்த பிரதேச செயலகம்.. சண்டியன்கள் வெளியேறுவார்களா..?

ஆசிரியர் - Editor I
அரச காணியில் குந்தியிருந்து அடாவடி..! ஆப்படித்த பிரதேச செயலகம்.. சண்டியன்கள் வெளியேறுவார்களா..?

கனகராயன்குளம் பகுதியில் அடாத்தாக அரச காணியை ஆக்கிரமித்ததுடன், முன்னாள் போராளி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பல அடாவடிகள் புரிந்த தாவூத் ஹோட்டலை அகற்றுமாறு பிரதே செயலகம் பணித்துள்ளது. 

இதற்கான கடிதம் குறித்த ஹோட்டல் அமைந்துள்ள காணியில் ஒட்டப்பட்டிருக்கின்றது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச காணியில் அதிகாரமில்லாமல் ஆட்சிசெய்தல் 

அல்லது குடியிருக்கிறீர் எனக்கருதுவதால் 1979 ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப்பெறுதல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 7 மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணியை காலி செய்யும் படியும், 

அக்காணியை காலியான நிலையில் பிரதேச செயலரிடமோ, அல்லது குடியேற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்படைக்குமாறும் குறித்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணியை முஸ்லிம் நபர் ஒருவர் அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், இது குறித்த சர்ச்சையில் முன்னாள் போராளியொருவரையும் அவரது உணவகத்தை சேர்ந்தவர்கள் தாக்கியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் பொலிசாரும் பக்கச்சார்பாக நடப்பதாக அப்போது அந்த குடும்பத்தினர் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு