அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது
தேர்தல் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை(1) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
தற்போது வேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த எமது சுகாதாரத்துறையினர் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் ஒன்று கூடலை தவிர்த்தல்இதேர்தல்கள் என்பது ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது அரசு இயந்திரம் இயங்க வேண்டும் அதற்கு தேர்தல்கள் மிகப் பிரதானமானது. அதனடப்படையில் அரசும் தேர்தல் திணைக்களமும் எடுத்து ஒத்துழைத்து கருமமாற்றுபவர்களாக சுகாதார துறையினர் விளங்க வேண்டும். தேர்தல்கள் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது இதுகுறித்து எமக்கு முறைப்பாடுகளை அல்லது செய்தியாக ஒன்று கூடுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.
இதற்கு அமைவாக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருக்கின்றோம் . ஒன்று கூடலை தவிர்த்தல் சமூக இடைவெளியை பேணுதல் பொது சுகாதார விழுமியங்களை கையாளுதல் போன்ற விடயங்களை இறுக்கமாக பேணுமாறு பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஊடாக வலியுறுத்தி இருக்கின்றோம். ஆகவே அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அற்ற நிலையில் அறிவுரை கூறுபவர்களாக சுகாதார துறையினராகிய நாங்கள் இருக்கிறோம்.அத்துடன் சொகுசுப் பேருந்துகளின் போக்குவரத்து தொடர்பில் மிக இறுக்கமான சுகாதார நடவடிக்கைகளை பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணித்து வருகிறோம்.பொது சுகாதார நடவடிக்கைகள் பேருந்துகளில் பேணப்படுகின்றது பயணிகளுக்கு இடையிலான இடைவெளி போன்றவற்றை விளங்கிக் கொண்டவர்களாக சுகாதார ஆலோசனைக்கு செவி சாய்த்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.