பெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றிய முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி
ரமழான் பண்டிகையை முன்னிட்டு எமது பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைக்கமைய முஸ்லீம் மக்கள் நடந்துகொண்ட விதம் சந்தோஷத்துக்கு உரிய விடயமாக காணப்பட்டது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கொவிட்- 19 பரவல் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை(1) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
கொவிட் -19 அனர்த்த நிலைமையினால் நாடுபூராகவும் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் எமது சமய கலாச்சார நிகழ்வுகள் இப் பிரதேசத்தில் ஒவ்வொரு இனரீதியான சமூகம் சம்பந்தமான விழாக்கள் இடம்பெறும்.இருந்த போதிலும் இக்காலப்பகுதியில் விசேடமாக வெசாக் ரமழான் பண்டிகை காலங்களில் எவ்வாறு மக்களை கட்டுபடுத்துவது என்ற பயம் எங்களிடம் இருந்தது. ரமழான் காலத்தில் எவ்வாறு சமய கடமைகளை ஆற்ற போகின்றார்கள் . ஒன்றுபட போகிறார்கள் கொவிட் 19 வைரஸ10க்குரிய தடுப்பு முறைகளை உடைத்து விடுமா என்ற ஐயப்பாடு எங்களிடம் இருந்தது.
ஆனால் எமது பிராந்தியத்தில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவசல்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும்அப்பகுதி முஸ்லீம் மக்கள் நடந்துகொண்ட விதமும் மிகவும் சந்தோஷத்துக்கு உரிய விடயமாக காணப்பட்டது .ஏனென்றால் பெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை ஏற்று ஒன்று கூடலை வெகுவாக தவிர்த்து இருந்தார்கள் இது அந்த சமூகத்திற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன் என்றார்.