இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன்
வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு கண்டுபிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
நாட்டில் கொரோணா தொற்று நோயால் கடந்த 03 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் இயங்காத இக்காலப்பகுதியில் கொரோணா தொற்று நோயை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு எவ்வாறு உதவ முடியும் என மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தகவல் தொழில் நுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் வீட்டிலிருந்தவாறு சிந்தித்துள்ளார்.
இதன் மூலம் பாதுகாப்பு தரப்பினரின் சமிஞ்சைகள் மற்றும் வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள்இ சாரதிகளை மனிதவலு மற்று நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் 'சமூக இடைவெளியை பேணக்கூடிய நவீன ஸ்மாட் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்' ஒன்றை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம்.முனாஸ்இ யு.எல்.ஜெஸ்மினா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வராவார்.